தஞ்சையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்..! டிரைவர்கள் இருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிரைவர்கள் இருவர்¢ பலி


திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தும், திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற  தனியார் பேருந்தும் மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்தன. நீடாமங்கலம் அருகே முன்னே சென்ற ஒரு பேருந்தை முந்திச் சென்றபோது, அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதி கோரவிபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் குடவாசலைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் ராஜாவும் அதே இடத்தில் இறந்துபோயினர். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 44 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்துகுறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். பேருந்தில் பயணம் செய்து விபத்திலிருந்து உயிர் தப்பிய சங்கரிடம் பேசினோம். ''மழை பெய்து கொண்டிருந்ததால் அரசுப் பேருந்து ஓட்டுநர் மெதுவாகத்தான் ஓட்டிச் சென்றார். எதிரே வந்த தனியார் பேருந்துதான் மின்னல் வேகத்தில் வந்து பெரும் சத்தத்துடன் மோதிவிட்டது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!