இலவச வேட்டி, சேலை காணாமல் போன விவகாரம்..! - வி.ஏ.ஓ விளக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகாவில் அமைந்துள்ளது கழனிவாசல் கிராமம். இப்பகுதியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதற்காக தீபாவளியை முன்னிட்டு எட்டு மூட்டைகளில் இலவச வேட்டி, சேலைகள் வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு மூட்டை குறைவதாக தற்போது வி.ஏ.ஓ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களால் ரூல்ஸ் ரெங்கசாமி என்றழைக்கப்படும் வி.ஏ.ஓ அருள்ராஜிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். 'என்னோட தாரக மந்திரமே "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்". இதன்படிதான் என்னோட வேலைகளில் இருக்கிறேன். நான் நேர்மையாக இருப்பதால் ஒரு சில அதிகாரிகளுக்கு வருமானம் பாதிக்கப்படுவதாகச் சொன்னார்கள். என்னோட லிமிட்டில் திருட்டு மணல் லாரிகள் ஓடினால் பிடிப்பேன் என்று சொன்னேன். அதேபோல் லாரிகளைப் பிடித்து ஆர்.டி.ஓ விடம் ஒப்படைத்தேன். ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அரசியல் எதிர்ப்புகள் எனக்கெதிராகக் கிளம்பியது. நான் நேர்மையாக இருப்பது என் மேலதிகாரிகளுக்கே பிடிக்கவில்லை.

என்னைத் திட்டமிட்டே பழிவாங்கியிருக்கிறார்கள். இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதற்கு வந்த மூட்டைகளை என்னிடம் ஒப்படைக்காமல் தலையாரியை வரச்சொல்லி அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? என்னோட வீட்டில் இறக்கிவைக்கச் சொன்னது யார்? நள்ளிரவில் என் அம்மாவிடம் தாசில்தார், வி.ஏ.ஓ- க்கள் வந்து மிரட்டியது ஏன்? இது என்னைப் பழிவாங்குவதற்காக நடந்தது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் என்னைக் கலங்கப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வேலைகளைச் செய்து அவர்களே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!