நடிகை அமலாபாலைத் தொடர்ந்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு சிக்கல்

 நடிகை அமலாபால், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஒரு வினியோகஸ்தரிடமிருந்து பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கியுள்ளார்  அதன் மதிப்பு 1.12 கோடி ரூபாய். அந்தக் காரை, தனது சொந்த மாநிலமான கேரளாவில் பதிவுசெய்தால்,  கேரளா அரசுக்கு ரூபாய் 20 லட்சம் வரை வரி கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால், பாண்டிச்சேரியில் போலி முகவரி மூலம் ரூபாய் 1.15 லட்சம் வரி கட்டி காரைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துவருகிறார்கள்.

 நடிகை அமலாபாலை தொடர்ந்து, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான இ கிளாஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார் . இவரும் தனது காரை பாண்டிச்சேரியில் பதிவுசெய்துள்ளார். அங்கே, எண் 16, இரண்டாவது குறுக்குத் தெரு  புதுபெட், லாஸ்பெட் என்ற முகவரியில் பதிவுசெய்துள்ளார் . அவரது காரின் பதிவு எண் PY 05 9899. ஃபகத் ஃபாசிலின் காரில், ஆவணங்களில்  பதிவுசெய்துள்ள முகவரியில் வேறொருவர் வசித்துவருவது தெரியவந்துள்ளது. இந்த காரை கேரள மாநிலத்தின் பதிவுசெய்திருந்தால், 14 லட்சம் வரி கட்ட வேண்டும். ஆனால், பாண்டிச்சேரியில் 1.5 லட்சம் மட்டும் வரியாகக் கட்ட வேண்டும். இதுகுறித்தும் தற்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். கேரளாவில் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் வைத்திருப்பவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து,  வரியை ஏய்ப்பு செய்துள்ளார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை அமலாபாலைத் தொடர்ந்து, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் தனது காரை பாண்டிச்சேரியில் பதிவுசெய்து வரி ஏய்ப்பு செய்துள்ள சம்பவம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!