ஒருநாள் மழைக்கு நிரம்பிவழிந்த 66 ஏரிகள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பெய்துவருகிறது. கடந்த சில நாள்களாக, சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில்  மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று பணிக்குச் செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர். 

File Photo

மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மழைகுறித்த பாதுகாப்பு அறிவுரைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அவசரகாலத் தொடர்புக்கு, தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. காலையில் குறைந்திருந்த மழை, தற்போது மீண்டும் பெய்யத் துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 900-க்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும், இரண்டு நாள்களுக்கு முன்பு வரை தண்ணீர் இல்லாமல் இருந்தன. நேற்று பெய்த கனமழையால், இவற்றில் 66 ஏரிகள் நிரம்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலே ஏரிகள் நிரம்பியது, பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.  மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற ஏரிகளும் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!