'என்ன நடக்கிறதென எனக்குத் தெரியும்'- அதிரடி காட்டிய காஞ்சிபுரம் எஸ்.பி; மிரண்டுபோன போலீஸ்

காஞ்சிபுரம் எஸ்.பி., தனது குடும்ப விஷயமாக 10 நாள் விடுமுறையில் கர்நாடகா சென்றிருக்கிறார். இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, மணல் அள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை முடித்துக்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக, விகடன் இணையதளத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இது, காஞ்சிபுரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மணல் காஞ்சிபுரம் பாலாறு

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி விடுமுறையில் இருந்தாலும், உளவுத்துறையின் மூலம் காஞ்சிபுரத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்துவருகிறார். இந்த நிலையில், விகடன் ஆன்லைனில் வந்த செய்தியைப் பார்த்திருக்கிறார். உடனே இதுகுறித்து சில அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார்.

எஸ்.பி சந்தோஷ் ஹதிமானிநேற்று இரவு அதிகாரிகளுக்கு போன்செய்த எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, “நான் வெளியூரில் இருந்தாலும் காஞ்சிபுரத்தில் என்ன நடக்கிறது என எனக்குத் தகவல் வந்துகொண்டிருக்கிறது. நான் விடுமுறையில் இருப்பதைப் பயன்படுத்தி, மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவா செயல்படுறீங்களா? அப்படி ஏதாவது நடந்தால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்” என அதிகாரிகளிடம் கடுமை காட்டியிருக்கிறார். மேலும், “மணல் கொள்ளையைத் தடுக்க, இரவு நேரத்தில் ரோந்துப் பணிகளைக் கவனிக்க வேண்டும். மணல் கடத்தல் பற்றிய சம்பவம் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.எஸ்.பி-களுக்கும் வாக்கிடாக்கி மூலம் அறிவித்திருக்கிறார். எஸ்.பி-யின் இந்த அதிரடி அறிவிப்பைக் கேட்டு, மிரண்டு போயிருக்கிறார்கள், காஞ்சிபுரம் காவல்துறையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!