சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்..! அமைச்சர் வேலுமணி தகவல்

மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள்குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். 


சென்னையில், கடந்த இரு தினங்களாகக் கடுமையான மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை அடையாறு பகுதிகளில் மழை பாதிப்புகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ''சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மீட்புப் பணிகள்குறித்து கேட்டறிந்தேன். சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் மழை பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். சென்னையில் தேங்கியிருக்கும் தண்ணீர், மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டுவருகின்றன'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!