பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மருத்துவமனையில் அனுமதி!

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தண்டுவடம், நரம்பியல், கால் செயலிழப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அதன் காரணமாகப் பேரறிவாளன் இரண்டு மாத காலம் பரோலில் வெளிவந்தார். பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவாரம் தங்கி சிகிச்சைபெற்றுவந்த நிலையில், பேரறிவாளன் பரோல் முடிந்து சிறை சென்றதால், பாதி சிகிச்சையில் வீடு திரும்பினார் குயில்தாசன். தற்போது, உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அற்புதம்மாள் உடனிருந்து கவனித்துவருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!