வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (31/10/2017)

கடைசி தொடர்பு:16:00 (31/10/2017)

மீண்டும் கிளம்பும் மீத்தேன் பூதம்! முற்றுகைப் போராட்டத்தில் விவசாயிகள்

டெல்டாவில் மீத்தேன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்காக, இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிக்காக 39 கிராமங்களைத் தேர்வுசெய்து, அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.

விவசாயிகள் 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள மாப்பிள்ளை குப்பத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இதுகுறித்து தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டனர் அதிகாரிகள். இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அப்பகுதிக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளின் காரை வழிமறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம், ''டெல்டாவை பாலைவனமாக மாற்றுவதற்கான அனைத்து கெடுதல்களையும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செய்ய நினைக்கிறது. அதற்கு, இந்த அதிகாரிகளும் துணைபோய்க்கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு, இதைவிட்டால் வேறு என்ன வழியிருக்கிறது. எங்கள் உயிர் உள்ளவரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்” என்றார்கள் ஆவேசமாக. 

தற்போது, அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் மீத்தேன் திட்டம்குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க