ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ-வுக்கு 7 ஆண்டு சிறை!

விதவை பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் அவர் உதவியாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழக்கி தீர்ப்பு அளித்திருக்கிறது அரியலூர் நீதிமன்றம்.

அரியலூர் மாவட்டம், உடையவர்தீயனூர் கிராமத்தில் கடந்த 1999-ம் ஆண்டு மேகா்மிஷா பேகம் என்பவா், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனிடம், ஆதரவற்ற விதவை உதவித்தொகை கேட்டு மனு கொடுத்துள்ளார். அப்போது, சீனிவாசன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மேகா்மிஷா பேகம் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி மேகா்மிஷாபேகம் 1,000 ரூபாய் பணத்தைக் கிராம நிர்வாக அலுவலா் சீனிவாசன் மற்றும் அவர் உதவியாளா் கணேசன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். பணத்தை இருவரும் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவா்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இந்த வழக்கு அரியலூா் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவி, கிராம நிர்வாக அலுவலா் சீனிவாசன் மற்றும் உதவியாளா் கணேசன் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீஸார், திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!