வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (31/10/2017)

கடைசி தொடர்பு:19:21 (31/10/2017)

எண்ணூர் துறைமுக ஆக்கிரமிப்பு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

பருவமழை தொடங்கியுள்ள நிலையிலேயே எண்ணூர் துறைமுக கழிமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

Photo Credit: KanimozhiDMK/Twitter

எண்ணூர் துறைமுகக் கழிமுகப் பகுதியில் 1,090 ஏக்கர் நிலத்தைச் சுற்றுச்சூழல் சிந்தனையில்லாத சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம் என்று நடிகர் கமல் குற்றம்சாட்டியதோடு, களத்திலும் இறங்கினார். எண்ணூர் துறைமுகக் கழிமுகப் பகுதி மற்றும் கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், அந்தப் பகுதி மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.    

 

இந்தநிலையில், பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வடசென்னையின் அத்திப்பட்டு புதுநகர் வெள்ளத்தில் மிதப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டரில் புகைப்படங்களுடன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக, எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமித்துள்ள வல்லூர் அனல் மின்நிலையம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.