வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (01/11/2017)

கடைசி தொடர்பு:11:20 (01/11/2017)

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்! சித்தராமையா சர்ச்சைப் பேச்சு

'கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடர்களே. அவர்கள் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்' என்று முதல்வர் சித்தராமையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 


கர்நாடக மாநிலம் பெங்களூரில் 62-வது கர்நாடகா ராஜ்யோட்சவா விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில், முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'நான் மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு எதிரி அல்ல. ஆனால், இங்குள்ளவர்கள் கன்னடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது, அம்மொழியை அவமதிப்பது போன்றது. கர்நாடகாவில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடர்களே. அவர்கள், கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கும் கன்னடம் கற்றுக்கொடுக்க  வேண்டும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.