பெங்களூருவில் ஸ்ரீதரின் சமையல்காரர் கைது! மரணத்தில் மர்மங்கள் வெளியே வருமா?

கம்போடியாவிலிருந்து இந்தியா வந்த ஸ்ரீதரின் சமையல்காரர் தேவேந்திரன், இன்று பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீதர்

வெளிநாடுகளில் பதுங்கியிருந்த காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர், கடந்த மாதம் 4-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதர் மீது கொலை, கொலைமிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ''ஸ்ரீதரின் பணப் பரிவர்த்தனைகள், வியாபாரம், தொடர்புகள் உள்ளிட்டவை ஸ்ரீதருடன் தங்கி இருக்கும் அவரது சமையல்காரர் தேவேந்திரனுக்குத் தெரியும். ஸ்ரீதருக்கு சாராய வியாபாரிகள் கொடுக்கவேண்டிய கடன் மட்டும் சுமார் 90 கோடி அளவில் உள்ளது'' என்று ஸ்ரீதர் இறப்பதற்கு முன், அவரது மகன் சந்தோஷ் குமாருக்குத் தெரிவித்தார். அதுபோல, ஸ்ரீதர் இறந்தபோது சமையல்காரர் மட்டும் உடன் இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு கம்போடியாவிலிருந்து பெங்களூரு வந்தார் தேவேந்திரன். காவல்துறை சார்பாக எல்.ஓ.சி. (look out circular) கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் தேவேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை அழைத்துவர, காஞ்சிபுரம் காவல்துறையினர் பெங்களூரு விரைந்திருக்கின்றனர். தேவேந்திரனிடம் நடைபெறும் விசாரணைக்குப் பிறகு, ஸ்ரீதர் பற்றிய பல மர்மங்கள் வெளியே வரும் என காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!