மதுரையில் சூரியின் உணவகத்தைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்..!

பிரபுதேவா நடித்த 'நினைவிருக்கும் வரை' படத்தில், சின்ன ரோல் செய்து தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக அடி எடுத்துவைத்தவர் நடிகர் சூரி. இந்தப் படத்துக்குப் பிறகு, 'சங்கமம்', 'ஜேம்ஸ் பாண்டு', 'உள்ளம் கொள்ளைபோகுதே', 'காதல்' எனப் பல படங்களில் சின்ன ரோல் செய்துகொண்டிருந்த சூரிக்கு, பெரிய அறிமுகமாக அமைந்த திரைப்படம், 'வெண்ணிலா கபடிகுழு'. 

சூரி

இந்தப் படத்துக்குப் பிறகு, தொடர்ந்து காமெடி ரோல் செய்துகொண்டிருந்த சூரி, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து காமெடிசெய்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள், ரசிகர்களிடம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. 

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சூரி, சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே தனது சொந்த ஊரான மதுரையில் டீ கடை நடத்திவந்தார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலமான பிறகும், அவர் தொடர்ந்து தனது  டீ கடையை நடத்திவந்தார். மதுரை புதூர் ஏரியாவில் உள்ள சூரியின் டீக்கடையான 'அம்மன்', பயங்கர ஃபேமஸ். மதுரையில் மட்டும் சூரிக்கு சொந்தமான டீ கடைகள் மொத்தம் ஆறு உள்ளன. இந்நிலையில், தனது சொந்தத் தொழிலை சற்று உயர்த்த முடிவுசெய்த சூரி, தனது அண்ணன் தம்பிகள் ஐந்து பேருடன் சேர்ந்து, மதுரை காமராஜர் சாலையில் 'அம்மன்' சைவ உணவகத்தைத் திறந்திருக்கிறார். இந்த ஹோட்டல் திறப்பு விழாவை நடிகர் சிவகார்த்திகேயன்  செய்திருக்கிறார். மேலும், நடிகர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!