வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (01/11/2017)

கடைசி தொடர்பு:16:00 (01/11/2017)

கந்துவட்டி வழக்கில் பதிலளிக்க தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கந்துவட்டிக் கொடுமை தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 


கந்துவட்டி கொடுமை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கனகவேல் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கந்துவட்டித் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்டந்தோறும் தனிக்குழு அமைக்க வேண்டும். கந்துவட்டிக் கொடுமை குறித்து தனிக்குழு மற்றும் பொதுநபர்களை வைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கந்துவட்டிக் கொடுமை குறித்து விசாரிக்க தனிக்குழு அமைப்பது தொடர்பாகத் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, உள்துறை செயலாளர் ஆகியோர் வரும் 4-ம் தேதி பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.