சபரிமலை பக்தர்களுக்காகக் கூடும் தென் மாநில முதல்வர்கள்

இந்தியாவின் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவில். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனைத் தரிசித்துவிட்டு வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு முதல்வர்கள் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 13-ம் தேதி கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைக்க இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை வருகிற 14-ம் தேதி தொடங்கவுள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவு சபரிமலைக்கு வருவார்கள். அப்போது பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த கேரளா மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகிற 13-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தென் மாநில முதல்வர்கள் அறநிலையத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். அந்தக் கூட்டத்தில் தென்மாநிலப் பக்தர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!