மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக உள்ளதா?: பூந்தமல்லி சிறையை ஆய்வுசெய்ய ஆணை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளைச் சிறையை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூந்தமல்லி கிளைச்சிறை, கைதிகளை அடைக்க ஏற்றதல்ல; அது மிருகங்களை அடைத்துவைக்கும் மிருகக்காட்சி சாலைகளைப்போல இருப்பதாகக் கூறி விசாரணைக் கைதி முகமது முத்தாகீர் என்பவரின் மனைவி நசியாகானும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், போதிய இடமில்லாமல் சிறைக்கைதிகள் 6 x 8 என்ற அளவில் உள்ள சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் சிறைக் கைதிகள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எந்தவசதிகளும் இல்லாதநிலையில், என் கணவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி மனு செய்தும் அதுதொடர்பாகச் சிறை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நசியாகானும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பூந்தமல்லி கிளைச் சிறையைத் திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிபதி நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் வரும் 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!