பப்பு அல்ல; பிளாக்பெல்ட்! ராகுலின் புதிய அவதாரம்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. அரசியலில் அவரை ஒரு குழந்தையாகவே மற்றக் கட்சித் தலைவர்கள் பார்க்கிறார்கள். அதனால், அவரை 'பப்பு' என்று செல்லமாக அழைப்பார்கள். தற்போது, 47 வயதான ராகுல்காந்தி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கான காலம் கனியவில்லை என்கிறார். தன் பிசியான அரசியல் வாழ்க்கைக்கிடையே ஜப்பானிய தற்காப்புக் கலையான அகிடோவில் பிளாக் பெல்ட் வாங்கிய விஷயத்தை அண்மையில் அவரே வெளியிட்டார். 

அகிடோ பயிற்சியில் ராகுல்காந்தி

கடந்த வாரம் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்குடன் இணைந்து ஒரு நிகழ்வில் ராகுல்காந்தி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய  ராகுல்காந்தி , ''என் வாழ்க்கையில் விளையாட்டு முக்கிய இடம் பிடித்த விஷயம். ஓட்டப்பயிற்சி, நீச்சல் அடிப்பது எனக்குப் பிடித்த விஷயங்கள். நான் அகிடோவில் பிளாக் பெல்ட் வாங்கியவன். உங்களில் யாருக்காவது தெரியுமா?. எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது. தினமும் ஒரு மணி நேரம் அகிடோ பயிற்சி மேற்கொள்வேன்'' எனப் பேசினார்.  

அப்போது, குத்துச்சண்டை வீரர்  விஜேந்தர் சிங், ''நீங்கள் அகிடோ பயிற்சி பெறும் புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்'' என ராகுலைக் கேட்டுக்கொண்டார். விஜேந்தருக்குப் பதிலளித்த ராகுல், 'நிச்சயம் புகைப்படங்களை வெளியிடுகிறேன்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

அகிடோ மாஸ்டர் ஷென்ஷாய் பரிடோஸ் கர் உடன் இணைந்து அவர் பயிற்சி பெறும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, திவ்யா ஸ்பானோந்தா நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் அகிடோ பயிலும் படங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.  

அகிடோ மாஸ்டருடன் ராகுல்காந்தி சண்டையில் ஈடுபடும் புகைப்படங்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!