வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (01/11/2017)

கடைசி தொடர்பு:09:01 (02/11/2017)

மெட்ரோ ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..! #raineffect

மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றின்வேகத்தை அறிவதற்கு அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
சென்னையில் கடந்த இரு தினங்களாகக் கடும் மழை பெய்துவருகிறது. அதனால், சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாக அறிவிப்பில், 'மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் மின்மோட்டார்கள் தயாராக உள்ளன. காற்றின் வேகம் 70 கி.மீ.க்கு இருந்தால் மெட்ரோ ரயிலின் வேகம் குறைக்கப்படும். காற்றின் வேகம் 90 கி.மீக்கு மேல் இருந்தால் மெட்ரோ ரயிலின் இயக்கம் நிறுத்தப்படும். விமானம் நிலையம், ஆலந்தூர், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றின் வேகத்தை அளப்பதற்கு அனிமோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.