வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..! | M.K.Stalin gym workouts video goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (01/11/2017)

கடைசி தொடர்பு:07:28 (02/11/2017)

வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..!

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 


தி.மு.க தலைவர் உடல்நலக் குறைபாடு அடைந்தப் பிறகு, அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர், செயல்தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அறிக்கைவிடுவதிலும், தனது தொகுதிக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டுவருகிறார். இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தம்புல்ஸ் எடுப்பதும், பென்ஞ் எடுப்பதும் வீடியோவில் உள்ளது.