வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (02/11/2017)

கடைசி தொடர்பு:07:07 (02/11/2017)

''அவர் அப்படி இல்லவே இல்லை!'' - கிராமத்தின் நம்பிக்கையை சிதைத்த ஐ.பி.எஸ். அதிகாரி

ஹைடெக்காக காப்பியடித்து மாட்டிக் கொண்ட நெல்லை ஐ.பி.எஸ் அதிகாரி, சபீர் கரீமுக்கு சொந்த ஊர் கொச்சி அருகேயுள்ள வயல்கரா என்கிற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர் என்ற வகையில் சபீர் கரீமைப் பார்த்து கிராமமே பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. ஹீரோவாக  வலம் வந்த அவர், சொந்த கிராம மக்கள்  வைத்திருந்த நம்பிக்கையே சிதைத்துள்ளார்.

 

காபியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி

சிறு வயதில் இருந்தே சபீர் கஷ்டப்பட்டு படித்துள்ளார். வயல்கரை கிராமத்தில்தான் பள்ளிப் படிப்பை படித்திருக்கிறார். ஐ.பி.எஸ் ஆபிஸர் ஆவதற்கு முன்னர், சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். பயிற்சிக்கு வந்த ஜாய்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஐ.பி.எஸ் ஆன பின்னரும் சொந்த ஊருக்கு வந்து மாணவ- மாணவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்பது எப்படி... என தயாராவதுகுறித்து வகுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

வயல்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சபீர்தான் ரோல் மாடல். சொந்த கிராமத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஆரம்பிப்பது சபீரின் இன்னொரு லட்சியம். கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'நானும் சபீர் போல ஐ.பி.எஸ். ஆவேன்' என்று சொல்வார்கள். அந்தளவுக்கு கிராமத்து மக்களின் இளைஞர்களின் நம்பிக்கையையும் நன் மதிப்பையும் பெற்றிருந்தார் அவர். 

சொந்த கிராமத்தின் மீது பற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறையும் கொண்டிருந்தவரா இப்படி காப்பியடித்து மாட்டிக்கொண்டார் என்பதை வயல்கரை கிராமத்து மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. வயல்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் முகத்தில் ஒருவித சோகம் அப்பியிருக்கிறது. 

சபீர் அவரின் மனைவி ஜாய்சியும் சிறைக்குச் செல்ல நேரிட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தைப் பார்த்துவிட்டு, அதேபோல் காப்பியடிக்க முடிவு செய்ததாக சபீர் தெரிவித்துள்ளார். சபீர், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் ஒரு சினிமாதான் காரணமாக இருந்திருக்கிறது. அந்த மலையாளப் படத்தின் பெயர் 'கமிஷனர்'!

கமிஷனர் அவரை ஹீரோவாக்கியது... முன்னாபாய் முகத்தை மாற்றியுள்ளது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க