வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (02/11/2017)

கடைசி தொடர்பு:08:55 (02/11/2017)

மழையின் காரணமாக ஆறு மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகம் முழுவதும் கனமழையின் காரணமாக ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த மூன்று நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்று திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டகளிலுள்ள பள்ளிகளுக்கு ஏற்கெனவே இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், மழையை பொறுத்து அந்தந்தப் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கலாம் என்று மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.