வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (02/11/2017)

கடைசி தொடர்பு:10:23 (02/11/2017)

அரசுத்துறையில் கவனக்குறைவை ஏற்க முடியாது..! அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

'அரசுத்துறையில் கவனக்குறைவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்கமுடியாது' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வசித்துவந்த இரண்டு சிறுமிகள், வீட்டின் முன்பு தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடியுள்ளனர். அப்போது, அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததால் இரண்டு சிறுமிகள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இரண்டு பேரும் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு நடிகர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அமைச்சர் ஜெயக்குமார், உயிரிழந்த சிறுமிகளின் வீட்டுக்கு நேரில் சென்று, பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அரசுத் துறையில் கவனக்குறைவு என்பதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. சிறுமிகள் உயிரிழப்பையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.