வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (02/11/2017)

கடைசி தொடர்பு:14:45 (02/11/2017)

’தை பிறந்தால் வழி பிறக்கும்’- தஞ்சையில் குதூகலித்த டி.டி.வி.தினகரன்

 தினகரன்

மூன்று திருமணங்களை அடுத்தடுத்து நடத்தி வைப்பதற்காக தஞ்சை வந்த டி.டிவி.தினகரனுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூவீலர்கள், கார்கள் எனப் பிரமாண்ட வரவேற்பு அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.

முதலில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பியின் தங்கை திருமணத்தை தினகரன் நடத்திவைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் தினகரனைச் சந்தித்து, `ஆர்.கே நகர் தேர்தலில் கூட்டணிவைத்து தேர்தலை சந்திப்பீர்களா?’ என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல், அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதிலளித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், “தமிழக அரசு செயல்பாட்டிலேயே இல்லை. இனிமேலாவது விழித்துக்கொண்டு மழை, வெள்ளம் மற்றும் டெங்கு பாதிப்புகளைச் சரிசெய்வதில் அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும்.

மத்திய அரசோடு அம்மா சுமுகமான உறவுதான் வைத்துக்கொண்டார். எடப்பாடி துரோகத்தின் உச்சகட்டத்தில் உள்ளார். இந்த அரசு அதிபெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துகிறது. நேற்று நான் டெல்லிக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, பிரதமர் நரேந்திர மோடி தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடியும் அமைச்சர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பாவனை செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார்கள். நீதிமன்றம் மூலம் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது தெரியும். என்ன நடந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும். அதுபோல தமிழகத்துக்கு நல்ல செய்தி கிடைக்கும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்குச் செல்லும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க