வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:20 (02/11/2017)

அரசியல் கைதி ’லைலா டி லிமா’வுக்கு மனித உரிமை விருது!

சர்வதேச மனித உரிமைக்கான விருது இந்தாண்டு லைலா டி லிமா-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

லைலை டி லாமா

சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கான  Liberal International அமைப்பின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான "மனித உரிமை மற்றும் விடுதலைக்கான விருதை" பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த, அரசியல் கைதியாக இருக்கும் "லைலா டி லிமா"வுக்கு (Senator Leila De Lima) வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் 199-வது கூட்டம் தென் அமெரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. 32 நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்றுகூடி ஓட்டெடுப்பு நடத்தி லைலா டி லிமாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய அதிபரை எதிர்த்து குரலெழுப்பியதற்காக கடந்த பிப்ரவரி மாதம் லைலா கைதுசெய்யப்பட்டார். அரசியல் உள்நோக்கத்தில் கைதுசெய்யப்பட்டு இருந்தாலும், சிறை சென்று தற்போது சிறைகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுத்துவருகிறார் ’லைலா டி லிமா’ என்பது குறிப்பிடத்தக்கது.