வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (03/11/2017)

கடைசி தொடர்பு:11:20 (03/11/2017)

கர்ப்பிணிப் பெண் தற்கொலை! - விசாரணை மும்முரம்

திருப்பூர் அருகே கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தை அடுத்துள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஜயகுமார். இவர் மனைவி விந்தியா. விஜயகுமாருக்கும் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விந்தியாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து, சமீபத்தில் விந்தியா கர்ப்பம் தரித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை தங்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கர்ப்பிணி விந்தியா திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் கேள்விப்பட்ட அவிநாசி பகுதி காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று தற்கொலை செய்து கிடந்த விந்தியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கர்ப்பிணி விந்தியாவின் தற்கொலை தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குறிப்பாகத் தற்கொலை குறித்து பகுதி கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.