'நான் நலமாக இருக்கிறேன்' - பாடகி பி.சுசீலா விளக்கம்

தமிழ் திரையுலகில் மனம் வருடும் பல பாடல்களைத் தந்து நமது மனதுக்கு நெருக்கமான பாடகிகளுள் ஒருவராக வலம் வருபவர் பி.சுசீலா. தேசிய விருது முதல் கின்னஸ் சாதனை வரை எல்லா விருதுகளும் இவரது குரலுக்கான அங்கீகாரமாய் கிடைத்தும் மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகுபவர். 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாடகி பி.சுசீலா

நேற்று முதல் சமூக வலைதளங்களில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா இறந்துவிட்டதாகச் சில தகவல்கள் வந்தன. ஆனால், அது தவறான தகவலாகும். அவர் கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவின் டெலஸோ மாகாணத்தில் இருந்து வருகிறார். மேலும் அவர் "என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருது. நான் வெளிநாட்டில் நலமாக இருக்கிறேன். நாளை சென்னை திரும்பிவிடுவேன். அதன்பின்னர் என்னோடு இன்டர்வியூ எடுத்துக்கொள்ளலாம். என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. எதையும் நம்பாதீர்கள். நான் நலமுடன் இருக்கிறேன்" என்று பி.சுசீலா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!