அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக தி.மு.க. மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணன் விசாரணை கமிஷனுக்கு மனு அனுப்பியுள்ளார். இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய டாக்டர் சரவணன், "நான் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக   போட்டியிட்டேன். அதில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு அங்கீகாரம் அளித்து  அக்கட்சியின் பொதுச்செயலளார் ஜெயலலிதா வழங்கிய சான்றில் வைக்கப்பட்ட கைரேகையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதை ரத்துசெய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் விசாரணை கமிஷனுக்கு மனு அனுப்பியுள்ளேன். அதில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை குறிப்பிட்டுள்ளேன். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் பல குழப்பங்கள் உள்ளது. ஜெயலலிதா ஆளுநருக்கு தன் கையெழுத்திட்டு நன்றி சொன்னதுபோல் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது, அதை விசாரிக்க வேண்டும்.

சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரணம்

ஒரு மருத்துவராக எனக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. சி.பி.ஐ விசாரித்தால்தான் இந்த வழக்கில் ஒரு முடிவு தெரியும். ஜெயலலிதாவின் மரணத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் சான்றிதழ்களில் கைரேகை வாங்கியதற்கான புகைப்படம், வீடியோ காட்சிகள் எங்கே? தனிப்பட்ட ஒருத்தரின் ஆதித்கத்தால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்துள்ளார். அவரிடம் 28 கைரேகை வாங்க அவசியமே இல்லை. 20 போதுமானது. அப்போலோ மருத்துவமனை ஆரம்பத்தில் கொடுத்த அறிக்கையில் குழப்பங்கள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவில் டாக்டர் பாலாஜி இல்லை. அவரிடம் ஏன் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பம் வாங்கினார்கள். இதுபோன்ற பல சந்தேகங்களைக் குறிப்பிட்டு விசாரணை கமிஷன் நீதிபதிக்கு மனு அனுப்பியுள்ளேன்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!