வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (04/11/2017)

கடைசி தொடர்பு:11:12 (04/11/2017)

சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து..!

மழையின் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.


தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த மூன்று நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்டன. அந்தத் தேர்வுகள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகங்கள் இன்றும் தேர்வை ரத்துசெய்துள்ளன. மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.