கடலில் கலந்த 1 டி.எம்.சி மழைநீர்!

அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 3-ம் தேதி வரை 1 டி.எம்.சி மழைநீர் கடலில் வீணாகக் கலந்துள்ளதாகப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளக்காடானது. புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். இந்தத் தண்ணீர் அனைத்தும் ஏரிகளுக்குச் செல்லாமல் கடலுக்குச் சென்றதுதான் வேதனை. 

இது குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலில், அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 3-ம் தேதி வரை 1 டி.எம்.சி மழைநீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. தற்போது விநாடிக்கு 5,000 கன அடியிலிருந்து 7,000 கன அடி நீர் வங்கக்கடலில் கலக்கிறது. அடையாறு வழியாக ஒரு டிஎம்சி மழைநீர் கடலில் வீணாகக் கலந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!