மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பெண் உயிரிழந்த சோகம்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியில் மர அரவை ஆலை வைத்திருப்பவர் மைக்கல் ராய். மர அரவை ஆலை வளாகத்தில் இவரின் வீடும் உள்ளது. இவரது வீட்டு அருகே கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீடும் உள்ளது. இந்த இரு வீட்டுக்கும் இடையில் இருந்த சுற்றுச்சுவர் ஏற்கனவே பலனின்றி இருந்துள்ளது. கடந்த இரண்டு நாள்கள் பெய்த மழையில் சுவர் மேலும் பலம் இல்லாமல் போயிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பகுதியில் மைக்கல் ராயின் மனைவி, ஜான்சி மேரி காலை வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென இந்த சுவர் பெரும் சப்தத்துடன் இடிந்து விழுந்தது.

இதில், சுவரின் இடிபாடுகளில் சிக்கி ஜான்சி மேரி சிக்கிக் கொண்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்களும், அருகிலிருந்தவர்களும் ஓடிவந்து அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜான்சி மேரி அங்கு பரிதாபமாக இறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!