விற்பனைக்கு வரும் என்.டி.ராமாராவின் சென்னை வீடு!

தெலுக்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என்.டி. ராமாராவ். தெலுங்கு ரசிகர்களின் பேராதரவால் ஆந்திராவின் முதல்வரானர். மூன்று முறை அந்திர மாநிலத்திற்கு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மாயாபஜார், சம்பூர்ண ராமாயணம், கர்ணன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கிருஷ்ணர் வேடம் என்றாலே என்.டி.ராமாராவ்தான் நினைவிற்கு வருவார்.

என்.டி.ராமாராவ், சென்னை வீடு

திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலங்களில் சென்னையில் ரங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் வசித்து வந்தார். கடந்த 1953ம் ஆண்டில் தி.நகரில் உள்ள பசுல்லா ரோட்டில் கஸ்தூரி சிவராவ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாங்கிய என்.டி.ராமராவ், அதில் குடியேறினார். 8,000 சதுர அடி பரப்பளவில் உள்ள அந்த வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. வரவேற்பு அறை, ஒப்பனை அறை, அலுவலகம் ஆகியவற்றை கீழ்பகுதியில் வைத்திருந்த அவர், மேல்தளத்தில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். திரைத்துறையில் பிரபலம் அடைந்த பிறகு ஆந்திராவில் நிரந்தரமாக தங்க தொடங்கினார். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் அவரது ரசிகர்கள் அந்த வீட்டை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அவரது வீடு விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை யார் வாங்க போகிறார்கள் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!