வெளியிடப்பட்ட நேரம்: 23:29 (04/11/2017)

கடைசி தொடர்பு:23:29 (04/11/2017)

வயிற்றில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள்! - கோவை விமான நிலையத்தில் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் வயிற்றில் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.17.93 லட்சம் மதிப்புள்ள 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோவை விமானநிலையத்தில், சமீபகாலமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. இந்நிலையில், சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா விமானத்தில்,  இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர்.

மருத்துவமனைக்கு சென்று அவருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்ததில், அவரது வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவரது வயிற்றில் இருந்து  5 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிக 583 கிராம் என்றும் அவற்றின் மதிப்பு ரூ.17.93 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ் (29) என்பது  தெரியவந்தது. வேலைவாய்ப்புத் தேடி அவர் துபாய் சென்றதாகவும், ஆனால், அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியின் வயிற்றில் கடத்தி வரப்பட்ட, 20 தங்கத் துண்டுகள், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு தற்போதுவரை, கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க