வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (05/11/2017)

கடைசி தொடர்பு:02:15 (05/11/2017)

மேம்பால பராமரிப்புப் பணி: ரயில்கள் நேரத்தில் மாற்றம்!

தெற்கு ரயில்வே போக்குவரத்தில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளியூர்-வடக்கு பணக்குடி இடைப்பட்ட பகுதியில் ரயில்வே மேம்பால பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை இந்த வழியாக செல்லும் ரயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி ரயில்  வள்ளியூர் நிலையத்தில இரண்டு மணிநேரம் நிறுத்தப்படுகிறது. அதேபோல திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் 1 மணி 40 நிமிடம் நிறுத்தப்பட இருக்கிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கத்தைவிட 60 நிமிடம் தாமதமாக புறப்பட இருக்கிறது. தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் வருகிற 12-ம் தேதி கொல்லத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் மெமு ரயில்கள் 66300, 66308 மற்றும் அதன் மறு மார்க்க ரயில்களான 66301, 66307 ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன. எர்ணாகுளத்திலிருந்து காயங்குளம் செல்லும் பயணிகள் ரயில்கள் 56381, 56387 மற்றும் அதன் மறு மார்க்க ரயில்களான 56382, 56388 ஆகிய ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க