கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் தம்பிதுரை!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தபட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

கோரிக்கை மனுவைப் பெறும் தம்பிதுரை

அப்போது பேசிய தம்பிதுரை, "முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி மக்களைத் தேடி அரசு நிர்வாகம் சென்று தேவையான உதவிகளைச் செய்ய வாரந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமந்தோறும் அம்மா திட்ட முகாம், மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம், அம்மா கால்சென்டர், இ-சேவை மையம் போன்றவைகளின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகலில் உள்ள மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இம்மனுக்களின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல் உத்தரவு, முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு, சிறுகுறு விவசாயிகளுக்கான சான்றுகள், மேலும் குடிநீர், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள், தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி, விவசாயிகள் பாசன நீர்நிலைகளை தூர் வாருதல் போன்றவை இக்கோரிக்கை மனுக்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், வரும் காலங்களில் அனைத்து கோரிக்கை மனுக்களும் பொதுமக்களிடம் இருந்து பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!