வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (05/11/2017)

கடைசி தொடர்பு:10:56 (06/11/2017)

மக்களைத் தேடி வரும் மருத்துவக் குழு! - மழைக்காலத்தை சமாளிக்க தமிழக அரசின் ஏற்பாடு

சென்னையில் 200 நடமாடும் மழைக்கால மருத்துவக் குழுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

 

chennai rain

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார். இவ்விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நிதி அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். 

vijaya baskar

200 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மக்களைத் தேடிச் சென்று மருத்துவ சேவை அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவக் குழு செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும். ஏற்கெனவே 400 மருத்துவக் குழுக்கள் உள்ள நிலையில் 200 கூடுதல் மருத்துவக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

vijayabaskar
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க