’கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி!’- ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு

'நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்குப் பணம் தேவைப்படும் என்கிறார்கள். அதற்கான பணத்தை என் ரசிகர்களே தருவார்கள். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டம் தான் புதிய ஆப் அறிமுகம். அது வருகிற 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். அன்றைய தினம் ஆப்-ன் பெயரும் செயல்முறை விளக்கமும் வெளியிடப்படும்' என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

கமல்

சென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் மேற்கண்ட கருத்தைக் கூறினார்.

கமல் மேலும் பேசும்போது, “தமிழக நலனுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பணக்காரர்கள் வரியை செலுத்தினாலே நாடு ஓரளவு சீராகி விடும். ஏதோ ஆர்வக்கோளாறில் நான் பேசுவதாக சொல்கிறார்கள். பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்க வேண்டாம். சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்காமல் செய்த தவற்றை திரும்பச் செய்கிறோம். மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எல்லோருக்கும் சமமானது. இதில் ஏழை பணக்காரன் என்ற  வேறுபாடு இல்லை. இயற்கை சீற்றங்கள் வருமுன் தவிர்க்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!