கோவையில் திடீர் மழை; அவினாசி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Heavy rains made road full of water in covai

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (05/11/2017)

கடைசி தொடர்பு:08:55 (06/11/2017)

கோவையில் திடீர் மழை; அவினாசி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கித் தீவிரமடைந்துவருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏரிகள் நிரம்பிவருகின்றன. 

அதேநேரத்தில், உள் மாவட்டங்களிலும் சில நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கோவையில், கடந்த ஒரு வாரமாக திடீர் திடீரென கனமழை பெய்துவருகிறது. இன்று மாலையும் கோவையில் கனமழை பெய்தது. மழையில் கொட்டிய வெள்ளம், கோவை அவினாசி சாலையில் ஆறாக ஓடியது. இதனால், சாலையில் பயணம்செய்த பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பலர், தங்களது வாகனத்தை ஓட்ட கடும் சிரமப்பட்டனர்,