வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (06/11/2017)

கடைசி தொடர்பு:08:07 (06/11/2017)

கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வரவேற்பு..!

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 


நடிகர் கமல்ஹாசன், கடந்த மூன்று மாத காலமாக தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். மேலும், அரசியல்ரீதியான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுவருகிறார். அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இன்று சென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில், அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று கமல் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், 'கமல்ஹாசனின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். அவருடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளைப் பொறுத்தே அவருடன் இணைந்து செயல்படுவதுகுறித்து முடிவு செய்யமுடியும்' என்று தெரிவித்தார்.