நில மோசடிப் புகார்: அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

நில மோசடிப் புகாரில், முன்னாள் அ.தி.மு.க  எம்.எல்.ஏ., ஞானமூர்த்தி மற்றும் காடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சேவல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஞானமூர்த்தி

இதுதொடர்பாகப் புகார் கொடுத்திருக்கும் கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த சக்திவேல், "கடந்த 2010-ம் ஆண்டு, வீரப்பெருமாள் நல்லூரில் எனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தைக் குடும்ப செலவுக்காக, கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சேவல் குமாரிடம் ரூபாய் 23 லட்சத்துக்கு அடமானம் வைத்துப் பணம் வாங்கினேன். அது, வட்டியும் முதலுமாக 45 லட்சம் ரூபாயாக ஆனது. ’இவ்வளவு பணம் நீ எப்படிக் கொடுப்பாய், நிலத்தை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., ஞானமூர்த்தியிடம் 81 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, என் பணத்தை நான் எடுத்துக்கிட்டேன். நீ வந்து கையெழுத்து போட்டுவிட்டு, மீதி பணத்தை வாங்கிக்கிட்டு போ’ என்றார் சேவல் குமார். அவரை நம்பி நானும் கையெழுத்துப் போட்டுவிட்டேன். ஆனால், 81 லட்சத்தில் 45 லட்சம் ரூபாய் போக மீதி எனக்கு 36 லட்சம் ரூபாயைக் கொடுக்காமல் இருவரும் ஏமாற்றிவிட்டனர்.

பணத்தைக் கேட்டால், ’எனக்கு எதுவும் தெரியாது. உன் பணம் ஞானமூர்த்தியிடம் இருக்கு. அவரிடம் வாங்கிக்கோ’ என்று சேவல் குமார் சொன்னார். ஞானமூர்த்திகிட்ட கேட்டால், ’நான் எல்லா பணத்தையும் சேவல் குமாரிடம் கொடுத்துவிட்டேன். நீ அவரிடம் வாங்கிக்கொள்’ என்று இருவரும் பல ஆண்டுகள் அலையவிட்டனர். இதனால், நான் மண உளைச்சலுக்கு ஆளானேன். இதுதொடர்பாக சி.எம்.செல், ஐ.ஜி, எஸ்.பி, டி.எஸ்.பி என்று பலரிடம் பலமுறை மனு கொடுத்தேன். ஆனால், புகார் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்பதால், இருவரும் அதிகாரிகளைச் சரிகட்டியே வந்தனர். அதன்பிறகுதான், சென்னைக்குச் சென்று நீதிமன்றத்தின் கதவைத் தட்டினேன். அவர்களின் உத்தரவின்பேரில், இப்போது அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இப்போதுதான் என் பணம் எனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையே வந்திருக்கிறது" என்றார்.
                              
                            படம்: தே.சிலம்பரசன்
    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!