சத்தியமங்கலம் காட்டுக்குள் சுற்ற ஆசையா? - ’வண்ணப் பூரணி’ வந்தாச்சு!

சத்தியமங்கலம் வண்ணபூரணி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 'வண்ணப் பூரணி' என்ற புதிய சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காட்டுக்குள்ளேயே  சென்று விலங்குகளைப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம், வனப் பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,  அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியது.  இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட  எராளமான வனவிலங்குகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இந்தப் பகுதியைச் சுற்றிப்பார்க்க ஆசைப்படாதவர்கள் இருக்கவே முடியாது. 

வனப் பிரியர்களை மகிழ்விக்க, புலிகள் காப்பகத்தின் உள் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று, 'வண்ணப் பூரணி' சுற்றுலாத் திட்டத்தை வனத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், புலிகள் காப்பகத்தைச் சுற்றிப் பார்க்கலாம். அதற்கென பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளது வனத்துறை. அந்த வாகனங்கள், உங்களை வனத்துக்குள்ளேயே அழைத்துச்செல்லும். அப்போது, காட்டுக்குள் உலவும் ஏராளமான வனவிலங்குகளை  நேரில் கண்டு ரசிக்கலாம்.  த்ரில், திகில் நிறைந்த இந்தச் சுற்றுலாவுக்கு 400 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளார்கள்.

வனச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள், சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவகத்தில் நேரில் சென்று பதிவுசெய்துகொள்ளலாம். விரைவில் ஆன்லைன் முன்பதிவு வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!