வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (06/11/2017)

கடைசி தொடர்பு:11:31 (06/11/2017)

’இந்தியாவை புதிய யுகத்துக்கு மோடி கொண்டுசெல்வார்' - முதல்வர் பழனிசாமி புகழாரம்

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றுவரும் தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

thanthi
 

பவள விழாவில் பங்கேற்பதற்கு முன்னர், பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகள்குறித்து விவரித்திருக்கிறார். 'தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கும்' என்று பிரதமர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

thanthi
 

பவள விழா தொடங்கியதும் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் தினத்தந்தி சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கிக்கொண்டிருக்கிறது பத்திரிகை. மக்களின் நாடி நரம்புகளைப் பிடித்துப்பார்த்து, அவர்களுக்கு செய்திகளைக் கொண்டுசேர்ப்பது பத்திரிகைதான். ஜனநாயகத்துக்கு அரசும் பத்திரிகையும் இருசக்கரங்கள். தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர், சி.பா.ஆதித்தனார்’ என்று தினத்தந்திக்குப் புகழாரம் சூட்டினார். மேலும், ’இந்தியாவை புதிய யுகத்திற்கு மோடி கொண்டு செல்வார். மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார் பிரதமர். அவர் தலைமையில் நடைபெறும் இவ்விழா, வரலாற்று நிகழ்ச்சியாகும்’ என்று குறிப்பிட்டு, பிரதமருக்கும் புகழாரம் சூட்டினார் முதல்வார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க