’அமைச்சர்கள் வருகைகுறித்து தெரிவிப்பதில்லை’: மைத்ரேயன் காட்டம்

’அமைச்சர்கள் வருகைகுறித்து எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை’ என அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

maithreyan

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், வெள்ளப் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வுசெய்துவருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்கள் ஆய்வுக்காக வருவதுகுறித்து எந்த முன் அறிவிப்பும் தருவதில்லை என அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைத்ரேயன், “கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்கள் பருவமழையினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் வருகைகுறித்து பொறுப்பாளர்கள் எந்தத் தகவலும் தருவதில்லை என்பது கழகத் தொண்டர்களின் ஆதங்கம். ஏன், எனக்கே எந்தத் தகவலும் இல்லை. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர் தங்கள் பகுதிகளில் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். 'மக்களால் நாம், மக்களுக்காக நாம்' என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். மக்கள் உங்களை அங்கீகரித்தால், இன்று உங்களைப் புறக்கணிப்பவர்கள் பிற்காலத்தில் உங்களைத் தேடிவருவார்கள். மக்கள் பணியே மகேசன் பணி” என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!