போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு குறைப்பு! | Police Protection reduced at Poes Garden

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (06/11/2017)

கடைசி தொடர்பு:17:26 (06/11/2017)

போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு குறைப்பு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் இல்லம்


ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அந்தப் பகுதியில் எப்போதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். எந்நேரமும் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பார்கள். ஜெயலிலதாவின் மறைவுக்குப்பின் போலீஸ் பாதுகாப்பு குறைத்துக் கொள்ளப்பட்டது. 50 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகையிலை பொருள்கள் விற்பனை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது, “நான் வரும் வழியான போயஸ் கார்டனில் அளவுக்கு அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது ஏன்? ” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இன்று காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது.  போலீசாரின் எண்ணிக்கை 50ல் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.