'என் ஆளோட செருப்பக் காணோம்' படத்தின் ட்ரெய்லர்! | Trailer of the movie 'En Aaloda Seruppa Kaanom'

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (06/11/2017)

கடைசி தொடர்பு:07:35 (07/11/2017)

'என் ஆளோட செருப்பக் காணோம்' படத்தின் ட்ரெய்லர்!

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எடுத்திருக்கும் திரைப்படம் 'என் ஆளோட செருப்பக் காணோம்'. 'மெரினா', 'கோலி சோடா' உள்ளிட்ட படங்களில் சின்ன வயது பையனாக நடித்த பக்கோட பாண்டி. ஓ ஸாரி இந்தப் படத்திலிருந்து தமிழ் என்ற பெயரில் அறிமுகமாகும் இவர்தான் படத்தின் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

என் ஆளோட செருப்பக் காணோம்


படத்தின் கதாநாயகியாக 'கயல்' ஆனந்தி நடிக்க காமெடி கதாபாத்திரத்தில் பாலசரவணன் மற்றும் யோகி பாபு நடித்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சிறிது நாள்களுக்கு முன்பு வெளியாகி லைக்ஸ் வாங்கியது. இதற்கிடையில் படத்தின் பாடல் உரிமையைக் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க