வெளியிடப்பட்ட நேரம்: 05:02 (07/11/2017)

கடைசி தொடர்பு:08:40 (07/11/2017)

நிதித்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார் ஹஸ்முக் அதியா

ஹஸ்முக் அதியா, hashmukh adhia

மத்திய நிதித்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார், ஹஸ்முக் அதியா. இவர், இந்திய வருவாய்த்துறைச் செயலாளராகப் பணியாற்றிவந்தார். இவரது பதவி உயர்வுக்கான உத்தரவை, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்துள்ளது. மத்திய நிதித்துறைச் செயலாளராக இருந்த அசோக் லவாசா ஓய்வுபெற்றுவிட்டதால், நிதித்துறைச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இந்நிலையில், அப்பதவிக்கு அதியா நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் நியமனக் கமிட்டி இவரது பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

1981-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்புக்குவந்தவர் அதியா. குஜராத் கேடரில் பணியாற்றி, பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துவந்தார். தற்போது, இவரது கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஐந்து முக்கியத்துறைகள் வருகின்றன. நிதிச் சேவைகள், பொருளாதார விவகாரங்கள், வருவாய், முதலீடு, செலவின விவகாரங்கள் ஆகிய துறைகளை அதியா நிர்வகிக்க உள்ளார்.  மேலும், மத்திய வர்த்தகத் துறைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பினோய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவும் வெளியிடப்பட்டிருக்கிறது.