ஐ.ஐ.டி-யில் 220 மான்கள் இறந்த வழக்கு: இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது! | Case on 220 deers death at IIT comes for hearing today

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (07/11/2017)

கடைசி தொடர்பு:11:49 (07/11/2017)

ஐ.ஐ.டி-யில் 220 மான்கள் இறந்த வழக்கு: இன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது!

சென்னையில் அமைந்துள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், கலைமான்கள், புள்ளிமான்கள், குள்ள நரிகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்களால் உருவாக்கப்படும் குப்பைகளாலும் அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலும் வன உயிரினங்கள் பல இறந்துள்ளன. குறிப்பாக, 220 மான்கள் இறந்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் தெரியவந்து பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து, வன விலங்கு ஆர்வலர் கிளமென்ட் ரூபின், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. 

IIT Madras

இந்த வழக்கில், முன்னர் தமிழ்நாடு வனத்துறை சார்பில், 'வளாகத்துக்குள் பிளாஸ்டிக் குப்பை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி வளாகத்துக்குள் 24 மணி நேரமும் செயல்படும்படியான கால்நடை மருத்துவமனையை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்பட்டால், வளாகத்தில் இருக்கும் வனவிலங்குகள் அனைத்தையும் கிண்டியில் இருக்கும் தேசியப்  பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும்' என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.