வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (07/11/2017)

கடைசி தொடர்பு:11:54 (07/11/2017)

ஓய்வு அறிவித்தார் பிர்லோ !

த்தாலி சூப்பர்ஸ்டார் ஆன்ட்ரூ பிர்லோ, கால்பந்து விளையாட்டுக்கு விடைகொடுத்துள்ளார். அவருக்கு வயது 38.

விடை பெற்றார் மிட்பீல்ட் மேஸ்ட்ரோ

இத்தாலி மிட்ஃபீல்டர் ஆன்ட்ரூ பிர்லோ, இரண்டு ஆண்டுகளாக நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடிவந்தார். முன்னதாக ஏ.சி.மிலன், இன்டர்மிலன், ஜூவான்டஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், ஏ.சி.மிலன் அணிக்காக விளையாடியபோது, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றினார். 2006-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணியிலும் பிர்லோ இடம் பிடித்திருந்தார். 

பிர்லோ ஃப்ரீகிக் மற்றும் பெனால்டி ஸ்பெஷலிஸ்ட். நடுக்களத்தில் அபாரமாக விளையாடக்கூடியவர். மிக நேர்த்தியான பாஸ்களையும் கோல் வாய்ப்புகளையும் உருவாக்கித்தரும் மிட்ஃபீல்டர் மேஸ்ட்ரோ. ஓய்வுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட் பதிவில்,''எனக்கு ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள், உதவியாளர்கள்,  எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் '' என பிர்லோ தெரிவித்துள்ளார். 

பிரெஸ்சிகா அணியுடன் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய பிர்லோ, 2011-ம் ஆண்டு ஜூவான்டஸ் அணியில் இணைந்த பிறகு, 4 முறை சீரி ஏ கோப்பையைக் கைப்பற்றினார். 2015-ம் ஆண்டு ஜூவான்டஸ் சீரி ஏ கோப்பையை வென்றதுடன், ஜூவான்டஸ் அணிக்கு விடைகொடுத்தார்.

இத்தாலி அணிக்காக 13 ஆண்டுகளில் 116 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள பிர்லோ, 13 கோல்களை அடித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க