குற்றாலம் அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு! - 4 வது நாளாகக் குளிக்கத் தடை | Flood in courtallam falls - tourists are no allowed to take bath

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (07/11/2017)

கடைசி தொடர்பு:13:52 (07/11/2017)

குற்றாலம் அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு! - 4 வது நாளாகக் குளிக்கத் தடை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4-வது நாளாகத் தொடர்கிறது.  

குற்றாலம் மெயின் அருவி

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தம் பணிகளைத் தொடங்கி உள்ளனர். கனமழையின் காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் விழுகிறது. அதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை, இன்று 4-வது நாளாகத் தொடர்கிறது. ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் கம்பிகள், கான்கிரீட் தரைப்பகுதி ஆகியவற்றை வெள்ளம் அடித்துச்சென்றதால், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது. எனவே, மணிமுத்தாறு அருவியில் இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. செண்பகாதேவி அருவியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டி ருக்கிறது. 

செண்பகாதேவி அருவி

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், இன்று 93 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.80 அடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 12 அடி அதிகரித்திருக்கிறது. சேர்வலாறு அணை 19 அடி அதிகரித்திருக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.    
 


[X] Close

[X] Close