வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (07/11/2017)

கடைசி தொடர்பு:12:42 (07/11/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு மட்டுமல்ல? - கடம்பூர் ராஜு அடடே விளக்கம்!

தமிழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பற்றியும் அதன் நிறைவு விழா பற்றியும்  செய்தியாளர்களிடம்  விரிவாகப் பேசினார்.

கடம்பூர் ராஜூ

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `'ஜெயலலிதா தலைமையில் 2016-ம் ஆண்டு ஆட்சி அமைத்தபோதே, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, இந்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். இப்போது அவர் இல்லையென்றாலும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுவருகிறது. கடந்த 30-6-17 அன்று மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவுபெறும். இதுவரை 21 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதன் நிறைவுவிழா, சென்னையில் நடக்கும். மேலும், எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் விரைவில் வெளியிடப்படும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாமல், நலத்திட்டங்களை வழங்கும் விழாவாகவும், பல அரசுத் திட்டங்களின் தொடக்க விழாவாகவும் இருக்கிறது'' என்று கூறினார்.