வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (07/11/2017)

கடைசி தொடர்பு:18:10 (07/11/2017)

`டெல்டாவில் பயிர்கள் மூழ்கவில்லை!’ - அமைச்சர் துரைக்கண்ணு

டெல்டாவில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் மழைநீர் வயல்வெளிகளில் தேங்காமல் வெளியேறுவதால் பயிர்கள் நாசமடையவில்லை எனத் தெரிவித்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.

 துரைக்கண்ணு

தொடர்ந்து பெய்துவரும் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டுள்ள 31 விவசாயிகளுக்கு கும்பகோணத்தில் நிவாரணம் வழங்கிய அமைச்சர் துரைக்கண்ணு பத்திரியாளர்களிடம், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசானது குடிமராமத்து பணிகள் அந்தந்த ஊராட்சிகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் முழுமையாகத் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் பெய்து வரும் மழையைத் தாக்குப்பிடிக்கும்படியாக மழைநீர் வயல்களிலிருந்து வெளியேறி வருகிறது. பெரும்பாலான இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்காமல் இருப்பதால் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை. இனிவரும் காலங்களில் மழையைத் தாக்குப்பிடிக்ககூடிய அளவுக்கு தூர்வாரப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. ஒவ்வொரு தாலுகாவிலும் மழைநீர் சூழ்ந்து வீடுகள் இடிந்துவிழுந்துள்ளது. அதுகுறித்து தாலுகா ஆணையர் கணக்கெடுப்பு நடத்தி அதற்குரிய நிவாரணம் கொடுக்கப்படும்' என்றார்.

துரைக்கண்ணு

கும்பகோணம் ஒன்றியம் அணக்குடி பழவாறு காவிரியின் கிளையாறு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இந்த ஆற்றை நம்பித்தான் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூர்வார வேண்டுமென திருப்பனந்தாள் ஒன்றியம் மணிக்குடியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லாமல் மணஞ்சேரி, கள்ளப்புலியூர், கோவிலாச்சேரி, அணக்குடி, அம்மன்பேட்டை, புத்தூர் ஆகிய பகுதியில் தூர்வாரப்படாததால் பயிர்கள் நீரில் மிதக்கின்றன என கும்பகோணம் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க